உணர்வுகள் அமைப்பின் சார்பில் 5 ஜோடி மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்




உணர்வுகள் அமைப்பின் சார்பில் 5 ஜோடி மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது

 


 

ஈரோடு, உணர்வுகள் அமைப்பின் சார்பில் சென்னிமலை ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா கலையரங்கத்தில் உணர்வுகளின் அமைப்பின் தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் 5 ஜோடி மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இத்திருமண விழாவில் கலந்துகொண்ட 5 ஜோடி தம்பதிகளும் இரண்டு மாதத்திற்கு முன்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சுயம்வரம் நிகழ்ச்சியின் மூலமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு திருமண பத்திரிக்கை அடிக்கப்பட்டு கல்லூரியில் திருமணம் நடை பெற்றது. திருமணம் முடிந்த பிறகு ஒவ்வொரு ஜோடிகளுக்கும்  தேவையான மளிகை பொருட்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், டிவி, டேபிள், சேர், துணி வகைகள் அனைத்தும் சேர்ந்து ஏறத்தாள இரண்டு லட்சம் ரூபாய் அளவிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. பிறகு அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இத்திருமணத்தில் மாற்றுத் திறனாளிகள் என்று பார்க்காமல் ஒவ்வொருவரும் தனியாக திருமணம் நடத்தி இருந்தால் என்ன விதமான திருமண சீர்கள் எல்லாம் செய்வார்களோ அவை எல்லாம் செய்யப்பட்டு மணப் பெண்ணுக்கு தாய்மாமன்கள் பட்டம் கட்டி கோவிலில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் உடன் அழைத்துக்கொண்டு நாதஸ்வரம், கேரளம் மேளங்கள் வாசிக்க மணமக்கள் அனைவரும் மணவறை க்கு அழைத்து வரப்பட்டார்கள். சென்னிமலை சிவாச்சாரியார் மதி அவர்கள் மூலமாக, சென்னிமலை சுப்பு சாமி அவர்கள் முன்னிலையில் திருமணமானது நடைபெற்றது. இத் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த கோவை மண்டலத்தின் முன்னாள் ஐ.ஜி திரு.பாரி, மாற்றுத்திறனாளிகளின் ஆணையர் அகத்திலிருந்து வருகை தந்திருந்த இணை இயக்குனர் முருகேசன், டாக்டர் சுப்பராயன் சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் மோகன் குமாரமங்கலம், சேலம் ஆர்ஆர் நிறுவனங்களின் சேர்மன் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து மணமகளுக்கு மணமகன் மெட்டி அணிவிக்க அனைத்து சம்பிரதாயங்களும் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளின் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் வரவேற்புரை ஆற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் தென்னரசு, இ.பி ரவி, டாக்டர் அப்துல் சமது, கே எம் கண்ணன், நவீன் குமார், டாக்டர் சுப்ரமணியம், சதாசிவம், தங்கராஜ், பிரதீப்,  ராஜேந்திர குமார் அகர்வால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் தாங்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதை மறந்து செக்மேட் நாட்டியக் குழு நண்பர்களோடு மணமக்களும் நாட்டியம் ஆடியது அங்கு இருந்த அத்தனை பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி னார்கள். நிகழ்ச்சியின் முடிவில் உணர்வுகளின் நிர்வாகிகள் வருகை தந்திருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்க விழாவானது இனிதே நிறைவுற்றது.


 

 



 

Previous Post Next Post