கோபி சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அன்னதானம்

கோபி சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அன்னதானம் வழங்கப் பட்டது.கோபி கள்ளிப்பட்டியில் உள்ள சுவாமி ஐயப்பன் கோவில் 39ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கோபி சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவை கோபி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எம்.ஆனந்தகுமார்  தலைமை தாங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார், மேலும் நகர செயலாளர் சிவக்குமார், நகர பொருளாளர் கமலக்கண்ணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேலும் நகர மகளிரணி தலைவி சரண்யா, நகர துணை தலைவர் இலியாஸ், நகர துணை பொருளாளர் அஸ்வின், சுகுமார்,கணேஷ்,லதா,நந்தினி,கோகிலா,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.