பழனியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர வலியுறுத்தி மனு

பழனியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர வலியுறுத்தி மனு அளித்தனர்.பழனி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர வலியுறுத்தி  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி நகர்க்குழுவின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் பழனி நகர செயலாளர் தங்கவேல் தலைமையில் மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உயர்திரு.டாக்டர் உதயகுமார் அவர்களிடம் மனு அளித்தார்கள்.