உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு விநியோகம்; கலெக்டர் ஆய்வு!




தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

 


 

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விநியோகம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டார். தூத்துகுடி மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 27.12.2019 அன்றும், இரண்டாம் கட்டமாக 30.12.2019 அன்றும் நடைபெறுகிறது. அதனடிப்படையில் ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் முன்னேற்பாடு பணிகள், வேட்பு மனுத்தாக்கலுக்கு வழங்கப்படும் படிவங்கள் மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  பார்வையிட்டார். பின்னர்  செய்தியாளர்களிடம் கூறி கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 

 


 

இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. டிசம்பர் 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த இறுதி நாளாகும். டிசம்பர் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆய்வு செய்யப்பட உள்ளது. டிசம்பர் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் திரும்ப பெற இறுதி நாளாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இந்த 2 கட்டங்களில் பதிவான வாக்குகளை 2.1.2020-ம் தேதி எண்ணப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஏற்கனவே செய்யப் பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் ஊரக பகுதிகளில் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நகரப்பகுதிகளில் பொருந்தாது. ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஊரக பகுதியில் ஊராட்சி அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஊராட்சி உறுப்பினருக்கான மனுக்கள் பெறப்படுகிறது. 

 

 

மேலும் மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  ஊரக பகுதியில் நடைபெறும் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் படிவங்கள், வாக்குசாவடி பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபெற உள்ள தேர்தலில் மண்ட அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 12 ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிக்குட்பட்ட பள்ளி அல்லது கல்லூரிகளில் நடைபெறும்" என கூறினார்.


 

 



 

Previous Post Next Post