குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் சார் ஆட்சியரிடம் மனு


108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி சேவை வழங்கிட கோரி குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் சார் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. 

குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குளித்தலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகிறது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவை தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனது தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நூத்தி எட்டு ஆம்புலன்ஸ் சேவை தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்படும் என செய்திகள் வருகிறது.  மீண்டும் குளித்தலை மையப் பகுதியான பேருந்து நிலையம் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் 108 சேவையை துவங்கி பொதுமக்களுக்கு சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை சார் ஆட்சியர் அவர்கள் சந்தித்து குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுத்தனர்.