மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு நடை பெற்றது.
மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோயிலில் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் ஆகியவை சார்பில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு இரண்டாம் அமர்வு  பூம்புகார் கலைக் கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியர் டாக்டர் அகரமுதல்வன் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு இரண்டாம் அமர்வு உரை நிகழ்த்தினார்.  தொடர் சொற்பொழிவு விழாவிற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் வரவேற்புரை நல்கினார். மயூரநாதர் திருக்கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் நன்றியுரை கூறினார். மயூரநாதர் திருக்கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம சேயோன் செய்திருந்தார்.