யம்மாடியோவ்.... உரலை பந்தாடிய ‘ராஜ மாதாக்கள்” !!!

நெல்லை மாவட்டம் வடலிவிளையில் நடந்த பொங்கல் விளையாட்டுப்போட்டிகள் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்து உள்ளது.


இங்கு இளைஞர்கள் மட்டும் இல்லாமல், இளம்பெண்கள் முதல், அனைத்து வயது பெண்களும் உரல்களை தூக்கி அசத்தியது, பெண்களின் வலிமைக்கு சான்றாக இருந்தது.


இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினார்கள்.


பெண்கள் வயது பேதமின்றி கலந்து கொண்டு உரல்களை தூக்கி அசத்தியதை பார்த்து பொதுமக்கள் ஆரவாரம் செய்து பாராட்டினர்.


ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என உரல்களை உயரதூக்கி போட்டு தங்கள் திறமையை பெண்கள் நிரூபித்தனர்.


இதற்கு ராதாபுரம் எம்.எல்.ஏ., இன்பதுரை ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டு தெரிவித்து உள்ளார்.