31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து பேரணி!
ஈரோடு மாவட்டம் பவானியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பவானி போக்குவரத்து காவல்துறை மற்றும் இரு சக்கர வாகன பழுது பார்க்கும் நிறுவனங்கள் சார்பாக ஹெல்மெட் அணிந்து பேரணி நடைபெற்றது.

 


 

இந்த பேரணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார் அதற்கு முன்னர் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து ஓட்ட வேண்டும் தங்களது பழுதுபார்க்கும் நிறுவனத்திற்கு வருகின்ற இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கும் கட்டாயம் இதை சொல்ல வேண்டும் என்றும் தங்களால் தான் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்வார்கள் என்று ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஏற்படும் நிகழ்வுகள் பற்றியும் அவர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்.

 

அதை தொடர்ந்து பேரணியை துவக்கி வைத்து பேரணி புதிய பேருந்து நிலையம்  அருகே உள்ள நீதிமன்ற வளாகத்தின் அருகே இருந்து துவங்கப்பட்டு அந்தியூர் பிரிவு கூடுதுறை பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்துசென்றனர் வழிநெடுகிலும் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிவதின் பயனை அறிந்து சென்றனர்.

 

  

Previous Post Next Post