அரசால் தடை செய்யப்பட்ட நான் ஓவன் பையை பறிமுதல்!

ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நான் ஓவன் பையை பறிமுதல் வந்த நகராட்சி ஆணையர் பாரிஜான் உட்பட அலுவலர்களை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல மணி நேர போராட்டத்திற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை மீட்டனர். 

 


 

தமிழக அரசு கடந்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி முதல் நான் ஓவன் பை உட்பட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தது.இதையடுத்து தமிழக முழுவதும் நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி ஆணையர் பாரிஜான் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் பவானி கமராஜ்நகர் வீதியில் சோதனை நடத்தினர்.அப்போது நான் ஓவன் பை தையல் கூட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த.1டன் எடை அளவு உள்ள நான் ஓவன் பைகளை பறிமுதல் செய்தனர்.

 

அப்போது அப்பகுதியில் நான் ஓவன் பை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் நகராட்சி ஆணையர் பாரிஜான் உட்பட நகராட்சி அலுவலர்கள் வந்த வாகனத்தை சிறைப்பிடித்து வாகனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நான் ஓவன் பை தைக்கும் தொழிலில் பவானி சுற்றுவட்டார பகுதியில் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும் என்று குற்றம்ச்சாட்டினர்.நான் ஓவன் பை தயாரிப்பு தொழிலுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட துணி பையை முறையாக நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.இல்லையென்றால்  மூலப்பொருளாக உள்ள நான் ஓவன் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

இதன் பின்னர் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட பைகளை நகராட்சி அலுவலர்கள் ஒப்படைக்கப்பட்டும் சோதனைக்காக மட்டும் சில நான் ஓவன் பையை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றனர்.இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பல மணி நேரமாக நகராட்சி ஆணையர் பாரி ஜான் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




Previous Post Next Post