கண் மற்றும் பொது மருத்துவ  முகாமில் 605 பேருக்கு சிகிச்சை  

 

                  ஏ.கே.ஆர் அகாடமி பள்ளி (சி.பி.எஸ் இ) மற்றும்  திருப்பூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் திருமுருகன்பூண்டி அணைப்புதூர் ஏ.கே.ஆர் பள்ளி வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு  திருப்பூர் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மணிமலர் வரவேற்றார். ஏ.கே.ஆர் அகாடமி பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார்.

                 முகாமில் ஓ.எம்.எஸ் மருத்துவமனை எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் அருள்ஜோதி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் ஸ்ரீநிவாசன் ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பொதுமருத்துவம் மற்றும் கண் பரிசோதனைகள் செய்தனர். முகாமில் 605 பேர் கலந்துகொண்டனர். 

                 இதில் அனைவருக்கும் சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 50 பேருக்கு இ.சி.ஜி எடுக்கப்பட்டு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இத்துடன் கண்புரை மற்றும் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட 20 பேர்கள் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். முடிவில் மிட்டவுன் ரோட்டரி சங்க திட்ட சேர்மன் குமரேசன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை  ஏ.கே.ஆர் பள்ளி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் செய்து இருந்தார். 

Previous Post Next Post