சி.ஏ.ஏ., என்ஆர்சி.,ஐ கண்டித்து ஏர்வாடியில் பேரணி!!!

 


தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு பெரு நகரிலும், 2ம் நிலை நகரங்கள், சிற்றூர்களிலும் பெரும் திரளான மக்கள் கூடி போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.


இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வர்த்தக அமைப்புகள், பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சியினர் இந்தப் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெற்றது. அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, வர்த்தக சங்கங்கள், கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தினர்.


இந்தப் போராட்டத்தில்  20,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நகர் முழுவதும் நேற்று கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் மாலை 4 மணி வாக்கில் நடந்த பிரமாண்ட பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.