ரயில்நிலையத்தில் இளம்பெண்ணை கடத்தி முள்காட்டில் சீரழித்த கொடூரர்களுக்கு போலீஸ் வலை!!!

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள விசுவாச நகரில் ஒரு பெட்ரோல் பங்கு இருக்கிறது.. இந்த பங்குக்கு எதிரே முள்காடு ஒன்று உள்ளது. 


  நேற்றிரவு 11 மணிக்கு ஒரு பெண் அந்த பகுதிக்கு வந்தார். வயது 25 இருக்கும்.. பார்க்கவே ரொம்ப சோர்வாக இருந்தார், அங்கிருந்த ஒரு  கடை அருகில் தட்டு தடுமாறி வந்து உட்கார்ந்தார். அப்போது அங்கே வந்த வாட்ச்மேன் அந்த பெண்ணிடம் என்ன ஏதென்று விசாரித்தார்.


அந்தப்பெண் தன்னை 2 இளைஞர்கள் இங்கே கடத்தி  வந்து பலாத்காரம் செய்ததாகவும் இதில் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதால், மயக்கமாக இருப்பதாகவும் சொன்னார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாட்ச்மேன் உடனடியாக காந்தி மார்க்கெட் போலீஸாருக்கு தகவல் தந்தார். போலீசாரும் விரைந்து வந்து, அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.


முதல்கட்ட சிகிச்சைக்கு பிறகு போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.. பெயர் லிடியா,  திருச்சி ஜங்ஷனில் பிளாட்பாரத்தில் நேற்றிரவு 10 மணிக்கு வந்து நின்றிருக்கிறார்.  அங்கு 2 இளைஞர்கள் சரக்கு ஆட்டோவில் பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றி, முட்காட்டு பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அந்த ஆட்டோவிலேயே வைத்து அவரை 
2 பேரும் சீரழித்துள்ளனர். அப்போதுதான் ரத்தப்போக்கு அதிகமாக வந்துள்ளது. அதை பார்த்து பயந்துபோன 2 இளைஞர்களும் பதறி அடித்து கொண்டு ஓடிவிட்டனராம்.


அவர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் அவர்களின் அடையாளத்தை லிடியா போலீஸாரிடம் சொல்லவும், தேடும் பணி நடக்கிறது. மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராயை ஆய்வு செய்தால், ஆட்டோவில் லிடியாவை கடத்தி வருவதும் பதிவாகி உள்ளது.. இந்த சம்பவம் திருச்சி மக்களை உறைய வைத்துள்ளது.