சேலம் பெரியார் பல்கலையில் இரண்டாமாண்டு மாணவி தற்கொலை!

 


  சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில்  முதுகலை தாவரவியல் இரண்டாம் ஆண்டு மாணவி நிவேதா தூக்கிட்டு தற்கொலை.


 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்காவைச் சேர்ந்தவர்  திருமலை. இவர் சக்கரை ஆலையில்  பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் நிவேதா. இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மாணவியர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை மாணவி நிவேதா விடுதிக்குள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்துள்ளார். இச்சம்பவம் பற்றி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் உதவி ஆணையர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் முதுகலை மாணவி பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.