பழனி மலைக்கோவிலில் அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் கூட்டம்!
பழனி மலைக்கோவிலில் அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது .

 


 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக திகழ்கிறது பழனி. இங்கு ஆண்டு முழுவதும் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகைபுரிவர்.  தைப்பொங்கலை மற்றும் தைப்பூச திருவிழா வருகை ஒட்டி பாதயாத்திரை வரும் பக்தர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் மற்றும் கர்நாடகா கேரளா மாநிலங்களில் இருந்தும் அரோகரா முழக்கத்தோடு பாதயாத்திரை பக்தர்கள்  வழக்கத்தை விட மலைக்கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.

 


 

இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை நிலையம் ரோப் கார் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எண்ணிலடங்கா பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணமிருந்தனர்.
 


 

 
 

5 Attachments