ரூபாய் நோட்டில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் பணமதிப்பு உயரும்  - சுப்பிரமணியன் சுவாமி

 


இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் பண மதிப்பு உயரும் என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். 


அமெரிக்க - ஈரான் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.


இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, இந்தோனேஷிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளதாகவும், விநாயகர் தடைகளை நீக்குபவர் என்றும் கருத்து தெரிவித்தார்.இதை கருத்தில் கொண்டு, இந்திய ரூபாய் நோட்டிகளில் லட்சுமியின் படம் அச்சிட தான் ஆதரவு தெரிவிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் கோரினார்.