14 ஆம்தேதி பட்ஜெட்: புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா?

  தமிழக சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது என தெரிவித்துள்ளார். 


அன்றைய தினம், காலை 10 மணிக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்றும் சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி மற்றும் முழுமையான நிதிநிலை அறிக்கை இது என்பதால், மக்களை கவரும் பல திட்டங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
குடியுரிமை திருத்தச் சட்டம், அரசுப் பணியாளார் தேர்வாணைய முறைகேடு உள்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்கட்சிகள் எழுப்ப வாய்ப்பு உள்ளதால் இந்த கூட்டத் தொடர் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.