முடங்கிய சீன தேசம்: 2000 நோக்கி பலி எண்ணிக்கை - 70 ஆயிரம் பேர் பாதிப்பு - உணவு கிடைக்காமல் அவதி

கோரோனோ வைரஸ் பாதிப்பால் சீன தேசம் முழுவதுமாக முடங்கி கிடக்கிறது. உலகின் வல்லரசாக வளர்ந்து வரும் சீனாவுக்கு போதாத காலமோ என்னவோ கோரோனோ வைரஸ் சீனாவின் வர்த்தகத்தை மட்டுமல்லாமல் மக்கள் நடமாட்டத்தையே முழுமையாக முடக்கி உள்ளது. ஞாயிறன்று  தகவலின்படி ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 73 ஆயிரத்து 332 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 795 பேர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். கோரோனோவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை வைத்து சீனா சமாளித்து வருகிறது. 


 கொரோனோவின் பிறப்பிடமான வூகானில் குடும்பத்தில் ஒருவருக்கு கோரோனோ வந்து விட்டது. மக்களை வெளியில் நடமாட விடாமல் அரசு முடக்கி வைத்துள்ளது. இதன் மூலம் நோய் பரவலை தடுக்க முடியும் என அரசு நம்பியது. ஆனால் பொதுமக்கள் அலர் கோரோனோ வந்த பின்பும் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெறவில்லை. வீடுகளுக்குள்ளே இருந்து கொண்டு நோயை தாங்கி கொண்டு அவதிப்பட்டனர். 


நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வந்தால் அவர்கள் காணாமல் செய்யப்படுவார்கள் என்று பரவிய வதந்தியால் தான் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவசர கால நிலையான இந்த நேரத்தில் வீடுகளுக்கு உள்ளேயே கோரோனோ நோயுடன் முடங்கி கிடப்பவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி வந்து சிகிச்சை அளிக்கிறது சீன அரசு. 


நோய் தாக்கப்பட்டவர்கள், உணவு கிடைக்காமல் நோயின் பாதிப்பு அதிகமாகி சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். 


சீனாவில் உள்ள வூஹான் நகர நிலைமை வெளி நாடுகளுக்கு தெரியக்கூடாது என்பதிலும் சீன அரசு தெளிவாக உள்ளது. செய்தியாளர்களை அங்கு அனுமதிக்கவில்லை. இதனால் தாள் கோரோனோ குறித்த வீடியோக்கள், படங்கள் வெளிவராமல் போகிறது. இதன் மூலம் சீன அரசு நோயை தடுப்பதை விட்டு விட்டு, நோயின் தாக்கம் வெளியில் பரவாமல் தடுக்க அதிக சிரத்தை எடுப்பதாக விமர்சனங்கள் அதிகமாகி உள்ளன. 


சீனாவுக்குச் சென்றுவந்த ஒரே காரணத்தினால் ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள "தி டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் உள்ள 3700 பேரில், கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 456ஆக உயர்ந்துள்ளது.


 ஞாயிறன்று ஒரே நாளில், மேலும் 99 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கப்பலில் உள்ள சுமார் 100 இந்தியர்களில், கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது. 


இதனிடையே கொரோனா பாதிப்பின்றி கப்பலில் சிக்கித் தவித்த 300க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். 


ஆனால் நோய்த்தொற்றுள்ள 40 பேர் ஜப்பானிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனாவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ரோபோக்களை பயன்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.


இந்த நிலையில் சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டம் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் இந்த கூட்டத்தை ரத்து செய்வது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டால் அது வரலாற்றிலேயே முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


இப்படி பல வகைகளில் பாதிக்கப்பட்ட சீனா மீண்டு வர வேண்டும் என பிரார்த்திப்போம்.