5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்த தேசிய ஆசிரியர் சங்கம் ஆதரவு







 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் மு.கந்தசாமி நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

 

மாநிலத்தின் கல்வித் திட்டம் தேசிய அடையாளங்கள் பாரத பண்பாட்டு பெருமைகள் சமூக நல சிந்தனை சுயசிந்தனை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உரிய மாற்றங்கள் செய்ய வேண்டும். தொடக்கக் கல்வி முழுவதும் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும். மத்திய அரசு மானியமாக கொடுக்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் நமது பங்களிப்பை கொடுத்த தலைவர் வாழ்க்கை வரலாறு குறித்த சம்பவங்கள் படங்கள் தொகுத்து வழங்க வேண்டும். இந்தியா  சிலம்பம்,  கராத்தே போன்ற இணைய செயல்பாடுகளை அரசின் பங்களிப்பில் நடத்திட உரிய அனுமதி வழங்குதல் வேண்டும். பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எதிர்பாராத விதங்களில் மரணம் ஏற்பட்டால் காப்பீடு வழங்க வேண்டும். மாணவர்கள் அறம் சார்ந்த கல்வி ஆன்மீகக் கல்வி குறித்து டிவிடி வழங்க வேண்டும். விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கஉரிய சலுகைகள் வழங்க வேண்டும். தமிழக ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் உதவியோடு மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் தொகையை ரத்து செய்து பழைய ஓய்வூதிய உதவித் தொகை  தொடங்க வேண்டும்,  கல்வி திட்டத்தில் 30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 18.01.2013 முன் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு முடிந்த நாளே உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும்.இடைநிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி,  விளையாட்டு கல்வி மற்றும் கணினி ஆசிரியர்களை நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் அரசு பள்ளிகள் போன்றே அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு உரிய பலன்களை பெற வேண்டும். ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த  வேண்டும். கல்விசாரா பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.அனைத்து வகை பள்ளிகளுக்கும்  இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.பள்ளி வேளாண்மை இணையதளத்தில்தகவல் அடிக்கடி கேட்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்நிலைப் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.இதில் மாநில பொருளாளர் திருஞானகுகன் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், கோபி கல்வி மாவட்ட தலைவர் ஸ்ரீஹரி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 




 


 



 



Previous Post Next Post