கூகலூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 75வது ஆண்டு பவள விழா
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கூகலூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 75வது ஆண்டு பவள விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

விழாவானது விளையாட்டு விழா,  ஆண்டு விழா மற்றும் கலை இலக்கிய விழா என மூன்று நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர் ராஜா  கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மேலும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கழக இயக்குனர் (பணிநிறைவு )பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை வினோபா சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் வட்டார கல்வி அலுவலர்  விஜயராணி,  தலைமை ஆசிரியை ரமாராணி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள் பெற்றோர்கள் என  அனைவரும் கலந்துகொண்டனர்.