இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம்

திருப்பூர் தினசரி காய்கறி சந்தை முழு அடைப்பு. 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தையை இடித்து வணிக வளாகம் அமைக்க உள்ளதாகவும் என்று தினசரி மார்க்கெட் இடிக்கப்படும் எனவும் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்திருந்தார். மாநகராட்சியின் இந்த முயற்சியைக் கண்டித்து இன்று தினசரி சந்தை யில் உள்ள 450 கடைகள் முழு அடைப்பு போராட்டம். மற்றும் 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வியாபாரிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து தினசரி மார்க்கெட் இடிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளனர்.


Previous Post Next Post