மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்: விஜயை விசாரணைக்கு அழைத்து சென்ற வருமான வரித்துறை


நடிகர் விஜயின் தளபதி 64 படத்திற்கான சினிமா காட்சிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது தளபதி 64 படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலி சுரங்கத்திற்கு உள்ளே சென்று வருமான வரித்துறை சம்மனை  தளபதி விஜயிடம்  கொடுத்துள்ளனர். 


மேலும் தளபதி விஜயிடம் விசாரணை மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது  இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கடந்த 2015 ம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான புலி படத்திற்கு முறையாக வருமானவரி செலுத்தப்படவில்லை என வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி இருந்தனர் இந்த  வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது.


நடிகர் விஜய் நடித்து வெளியான பிகில் திரைபட்டத்தின் ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமானதுறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது விஜய்ககு வரி ஏய்பபு தொடர்ரபாக சம்மன் கொடுத்துள்ளனர் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது 


 
தற்போது 25. கோடி வருமான வரி ஏய்பபு செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது