பச்சை மலை நடராஜப் பெருமானுக்கு நுழைவு வாயிலில் நிலவுகால் நிறுத்தும் பணி
 

கோபிசெட்டிபாளையம் பச்சை மலை பாலமுருகன் திருக்கோவில் நடராஜப் பெருமானுக்கு என தனி சன்னதி கட்டுமான திருப்பணி 43 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இன்று நடராஜப் பெருமானுக்கு நுழைவு வாயிலில் நிலவுகால் நிறுத்தும் பணி நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நிலவுகால் நிறுத்தும் பணி நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.