மனைவியை கொல்ல முயன்ற கணவன் ;ஆண்டுகள் ஜெயில்

திருவண்ணாமலையில் மனைவியை கொல்ல முயற்சி செய்த கணவனுக்கு திருவண்ணாமலை மகளிர் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 திருவண்ணாமலை நகரை சேர்ந்தவர் தரணி அவரது கணவர் குரு என்கிற குருமூர்த்தி கடந்த 8.7.2014 ஆம் தேதி மாலை குடும்பத்தகராறு காரணமாக தன் மனைவியை ஆபாசமாக பேசி அடித்து கொடுமைப்படுத்தி கொலை செய்ய முயன்றதாக கணவனை திருவண்ணாமலை நகர காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று கனம் நீதிபதி அவர்கள் எதிரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது