லாரிக்கு அடியில் தூங்கிய இருவர் உடல் நசுங்கி பலி

மதுரையில் லாரியின் அடியில் படுத்துத் தூங்கிய இரண்டு பேர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி செத்தனர்.


மதுரை மதிச்சியம்,  வைகை ஆற்றுப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இருகரைகளில் காங்கிரிட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் மூன்று பேர் சிமெண்ட் கலவை இயந்திர லாரியின் பின்புறம் லாரிக்கு அடியில் படுத்து உறங்கி உள்ளனர்.
இதனை கவனிக்காத லாரி ஓட்டுநர் லாரியை பின்புறம் நோக்கி எடுத்து ஓட்டியுள்ளார். இதில்சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மதிச்சியம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.