இலவச கண் சிசிச்சை முகாம். 


 

பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆதரவுடன் புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ஜூவன் ஒளி அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச கண் சிசிச்சை முகாம். 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கமங்களம் கிராமத்தில் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ஜூவன் ஒளி அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிசிச்சை முகாம் நடத்தினர். 

 

இந்த கண் சிகிச்சை முகாமில் கண்புரை, நீர் அழுத்தம், கண்ணில் நீர் வடிதல், நீர்ப்பை அடைப்பு, மாலைக்கண், கண் எரிச்சல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சை அளித்து நோயாளிகளை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று தங்க வைத்து இலவச சிகிச்சை செய்து அனுப்பி வைக்கப் படுவார்கள். முன்னதாக ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ள உள்ளிட்ட ஆரம்ப நிலை சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 

 

இதில் பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், ஜீவன் ஒளி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கோபி, ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி சிவசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.