கொரோனாவிலிருந்து காக்க வேண்டி பழனி மலைக்கோயிலில் 108 மூலிகைகளால் யாகபூஜை

 

பழனி மலைக்கோயிலில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க 

கோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி   அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி  திருக்கோயிலில் கொரோனா  வைரஸ் தாக்கத்திலிருந்து தமிழகம் மற்றும் உலக மக்களை காக்கும் பொருட்டு மலைக்கோயிலில்  ஸ்கந்த ஹோமம் நடைபெற்றது. 

இதில் திருக்கோயில் சார்பாக ஜூரபீதி நீங்க 108 மூலிகை பொருட்கள் கொண்டு யாக

குண்டம் வளர்த்து உச்சிகால பூஜையின் போது அபிஷேகம் செய்யப்பட்டது.

பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழக்கமாக  பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா வைரஸ் எதிரொலியால்  பக்தர்கள், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் கதவும் சாத்தப்பட்டு இருந்தது. 

இதனால் அர்ச்சகர்கள் மட்டும் கலந்துகொண்டு