மணல் கடத்தியதாக 2 பேர் கைது டிராக்டர் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டிஎஸ்பி சுந்தரம் தலைமையில் அனக்காவூர் போலீஸார் தீவிர மணல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது செய்யாற்று படுக்கையில் இருந்து மணல் ஏற்றிவந்த டிராக்டரை கீழ்நீர்குன்றம் பகுதியில் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் (42) என்பதும் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சற்குணத்தை கைது செய்தனர். இதேபோல பெரணமல்லூர் போலீசார் அன்மருதை பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அங்குள்ள ஆற்றில் இருந்து மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து திருமணி பகுதியைச் சேர்ந்த திருச்சிற்றமபலம், கருக்கன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ஆகியோரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.