வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த விவகாரம்-ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு, 2 பேர் கைது

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த விவகாரம்-ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு, 2 பேர் கைது


சாத்தூர் அருகே சிற்பிப்பாறையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்  நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 


பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்  கணேசன், மேலாளர் பாலகிருஷ்ணன், மேற்பார்வையாளர்கள்குட்டி, மகேஸ்வரன், ஆலை போர்மேன் மதியழகன் உள்ளிட்ட 6 பேர் மீது  கவனக்குறைவாக வெடிபொருட்களை கையாண்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியது,  மரணம் ஏற்படும் வகையில் குற்றம் புரிந்தது  உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் ஆலையின் போர்மேன் மதியழகன் மற்றும் மேற்பார்வையாளர் மகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


மேலும் ஆலை உரிமையாளர் கணேசன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.