கொரோனா வைரஸ் பரவல்: சளி காய்ச்சல் பக்தர்கள் பழனி கோவிலுக்கு வரவேண்டாம்!

கொரோனா வைரஸ் எதிரொலியாக,  பழனி முருகன் கோவிலுக்கு சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம். கோயில் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டாம் என பழனி கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது பகதர்கள் மத்தியில் பரபரப்பு


கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பழனி தொழிலதிபர்கள் ஹோட்டல் மற்றும் தங்கும்விடுதி உரிமையாளர்கள் காம்ப்ளெக்ஸ் கடைக்காரர்கள் பேருந்து உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் பழனி நகராட்சி அலுவலக அரங்கத்தில் நடைபெற்றது நகராட்சி ஆணையர் சுகாதார துணை இயக்குனர் இராஜேஷ்வரி மற்றும் அரசுமருத்துவர்கள் கலந்து கொண்டு நோய் வராமல் தடுக்கும் முறைகள் பற்றி எடுத்துரைத்தனர்.


 


முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். குறிப்பாக அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பழனி கோயில் நிர்வாகமும் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு உள்ள பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், பக்தர்கள் அதிகம் கூறக்கூடிய கோயில் விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்க்கவும் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் மலையடிவாரத்தில் படிப்பாதை,  ரோப்கார் நிலையம், வின்ச் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனோ வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்களில் உள்ள மருத்துவர்களை அணுகி அறிவுரைகளையும், சிகிச்சையையும் பெற்றுக் கொள்ளவும் கோயில் நிர்வாகம் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளது . தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் எதிரொலியின் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோயிலுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.