மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

 


 ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :


கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக மார்ச் 21 தேதி முதல் ஏப்ரல் 14 வரையிலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த பட்டது . இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்து மக்களை பாதுகாக்கும் வகையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீடிக்க பட்டால் இதனை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது . மேலும் பொது மக்கள் சமூக இடைவேளியை கடை பிடித்து கொரோனாவை ஓழிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம் .


பொது மக்களுக்கு உணவு பொருட்கள் குறைந்த விலையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் ஏழைகள் மற்றும் அமைப்பு சார தொழிலாளிகள் போன்றோரின் குடும்பத்திற்கு உணவு பொருட்கள் இலவசமாக கிடைப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் . மேலும் தினசரி கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களும்  வாழ்வாதாரம் பாதிக்க பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி  வருகிறார்கள் . இதனை கருத்தில் கொண்டு  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க படாமல் இருக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . 


ஊரடங்கு உத்தரவினால் சென்னை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் கூலி  வேலை செய்து வரும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலரும் சொந்த ஊர் திரும்பி செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடியிலும் மனவேதனையுடனும் இருந்து வருகிறார்கள். ஆகையினால் அவர்கள் சொந்த ஊர் திரும்பி செல்வதற்கு ஒரு நாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . 


கொரோனா அறிகுறிகள்  சம்பந்தமாக அரசு முன்னெச்சரிக்கையாக  மருத்துவ சிகிச்சை அளித்து வருவது  வரவேற்க்க தக்கது . மேலும் தனியார் மருத்துவ மனைகள் மூடி கிடப்பதனால் சர்க்கரை நோய் , இரத்தம் அழுத்தம் , நரம்பு தளர்ச்சி , கல்லீரல் கனையம் , மன்னீரல் , தைராய்டு .சிறுநீரகம்,  மற்றும் இது போன்ற பல்வேறு நோயிகளுக்கு  மருத்துவ சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ளது . மேலும் நோயாளிகளின்  நலன் கருதி தனியார் மருத்துவ மனைகள் திறந்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தமிழக அரசு உரிய  நடவக்கை எடுக்க வேண்டும் . கோரோனா பரி சோதனைக்கு தனியார் மைய்யங்கள் ரூ 4500 வாங்குவதை தவிர்த்து மக்களுக்கு இலவசமாக பரி சோதனை செய்வதற்கு தனியார் மைய்யங்கள் முன் வர வேண்டும் மென கேட்டு கொள்கிறோம்.  ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் பட்ச்சத்தில் ஓவ்வொரு குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ 6000 தமிழக அரசு வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்  .


Previous Post Next Post