ஆதரவற்ற 250 நபர்களுக்கு தினமும் மதிய உணவு; மணியம் எலக்ட்ரிகல்ஸ் இந்திரா சுந்தரம் வழங்கி வருகிறார்


ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரோட்டோரங்களில் வசிப்பவர்கள் உணவில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பழைய பேருந்து நிலையம், உஷா தியேட்டர் ரோடு, ரயில்நிலையம் அருகில், பார்க்ரோடு, வாலிபாளையம் ஆகிய பகுதிகளில்உள்ளவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களாக தினமும் 250 நபர்கள் வீதம் இதுவரை 1000 பேருக்கு மதிய உணவு வழங்கி வருகிறார் மணியம் எலக்ட்ரிகல் இந்திராசுந்தரம் (ரோட்டரி எவரெஸ்). இன்னும் தொடர்ந்து வழங்குவதாகவும் தெரிவித்தார்.இவர் ஊரடங்கு துவங்கிய நாட்கள் முதலே தினமும் எதாவது ஒரு உதவி என்று செய்து கொண்டே வருகிறார். இவரின் இந்த செயலை காவல் துறையினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். 


Previous Post Next Post