தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட 33 குழந்தைகளில் 10 பேர் திருப்பூர் மாவட்டத்துக்காரர்கள்: இன்றுடன் 80 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதிவேகமாக பரவியது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் இன்று வரை 79 பேர் என்ற எண்ணிக்கை தொடர்ந்தது.



(படம்: திருப்பூர் மாநகராட்சிக்கு வந்துள்ள நடமாடும் கொரோனா நோய் மாதிரி பரிசோதனை மையம்)


--------------------------------------------------------------------------------------------------------------


இந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபர்கள் எண்ணிக்கை 80 ஆனது. 


தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 33 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 குழந்தைகள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதில் ஒரு குழந்தைக்கு ஒரு வயது என்பது குறிப்பிடத்தக்கது. அவிநாசி மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைகள் நல்லபடியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


அதிகபட்சமாக 50 வயதுக்கு மேற்ப்பட்ட 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 முதல் 40 வயதுக்குட்ப்பட்ட 18பேரும், 41 முதல் 50 வயதுக்குட்ப்பட்டவர்கள் 9 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


மேலும், 21 முதல் 30 வயதுக்குட்ப்பட்ட 13 பேருக்கும், 11 முதல் 20 வயதுக்குட்ப்பட்ட 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


தொற்று உறுதி செய்யப்பட்ட மொத்த ஆண்கள் எண்ணிக்கை 47 ஆகும். பெண்கள் எண்ணிக்கை 33 ஆகும். 


இன்று தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 பேர். தனிமைப்படுத்தலில் இருந்து நோய் அறிகுறி எதுவும் இல்லாமல் விடுவிக்கப்பட்டவர்கள் 74 பேர். மொத்தமாக 884 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள். 


 


Previous Post Next Post