திருப்பூர் மக்களை திகைக்க வைத்த இந்திரா சுந்தரம்; காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் பாராட்டு

5 குடும்பங்களுக்கு 25கிலோ அரிசி ஒரு மாத மளிகை பொருட்கள், காவலர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு பிஸ்கட் டீ என்று திருப்பூர் மக்களை திகைக்க வைத்து வருகிறார் மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் இந்திரா சுந்தரம். 


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்படும் குடும்பங்களை தேடி சென்று உதவி வருகிறார் திருப்பூரை சேர்ந்த மானியம் எலக்ட்ரிக்கல்ஸ் இந்திரா சுந்தரம் ( ரோட்டரி எவரெஸ்ட் ) அவர்கள்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் தினமும் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதுபோல் நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாத குடும்பம், கணவரை இழந்த குடும்பம், மாற்றுத்திறனாளி குடும்பம், மற்றும் மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பம் என்று 5 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 கிலோ அரிசி மூட்டை மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கினார். 


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


மேலும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கையொட்டி காவல் பணியில் உள்ள காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், கொரோனா தடுப்பு மருந்து தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சாலையோரத்தில் தங்கியிருப்பவர்கள் என்று அனைவருக்கும்


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


மலை நேரத்தில் பிஸ்கட், வாழைப்பழம் டீ ஆகியவைகளை  மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் இந்திரா சுந்தரம்  ரோட்டரி  எவரஸ்ட்  வழங்கினார். 


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கடைகள்  எதுவும்   இல்லாத சூழ்நிலையில் இவரின் இதுபோல உதவிகளை  காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் என அணைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.  


Previous Post Next Post