கொ.ம.தே.க திருப்பூர் தெற்கு மண்டலத்தில் கபசுரகுடிநீர் விநியோகம்: ரூரல் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, நல்லூர் கனகராஜ் வழங்கினார்கள்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாநகர தெற்கு மண்டலம் நல்லூரில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது


 ரூரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மீனாகுமாரி வருகை தந்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.  பசுரக் குடிநீரின் பயன்களையும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த குடிநீரை அனைவரும் குடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.


பின்னர் அனைத்து பொதுமக்களுக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் காவலர்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில்  தெற்கு மண்டல நிர்வாகிகள் தெற்கு மண்டல செயலாளர் நல்லூர் கனகராஜ் தலைமையில் மண்டல பொருளாளர் பிரகாஷ், இளைஞரணி செயலாளர்  வேலுச்சாமி, இளைஞரணி துணைச் செயலாளர் ரவி, 38 வது வார்டு செயலாளர் பாலாஜி, முத்து மாணவரணி ஹர்ஷத், சிவராஜ்,
என்.ஆர்.ஜி. வெங்கடாசலம்  உள்பட பலர் பங்கேற்றனர்.