நத்தத்தில் 96 தூய்மை பணியாளர்களுக்கு வர்த்தகர்கள் சங்கம் சார்பில் மளிகை பொருட்கள்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பேரூராட்சியில் பணிபுரியும் 96 தூய்மை பணியாளர்களுக்கு வர்த்தகர்கள் சங்கம் சார்பில் மஞ்சள்பொடி, பருப்பு, சோப்பு, கோதுமை, சமையல் எண்ணெய், மொச்சை, சுண்டல் உள்ளிட்ட 15 வகையான மளிகை பொருட்களை தலைவர் சேக்ஒலி பணியாளர்களுக்கு வழங்கினார்.இதில் செயலாளர் குத்புதீன், பொருளாளர் முருகேசன்,செயற்குழு உறுப்பினர்கள் நகுலன், மகேஷ், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சடகோபி, எழுத்தர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.