பவானியில் காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கொரொனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இடை விடாமல் பணி செய்துவரும் காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை பவானியில் நடைபெற்றது. காவல்துறை மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் ரத்த பரிசோதனை சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்கார்த்திக் பவானி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சேகர் பவானி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் பவானி போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்