திருப்பூர் ரிப்போர்ட்டர்ஸ் அசோசியேசன் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைபொருட்கள்: இன்ஸ்பெக்டர் ராஜன், கே.ஜி.எஸ்.ரமேஷ் வழங்கினர்

மக்களுக்கு உடனுக்குடன் இன்றைய நிலவரத்தை கொண்டு செல்ல குடும்பத்தினர் விட்டு அல்லும் பகலும்  பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு 
திருப்பூர் ரிப்போர்ட்டர்ஸ் அசோசியேசன் சார்பில் அரிசி பருப்பு மளிகைபொருட்கள் வழங்கப்பட்டது.



உலகெங்கிலும் கொரோனா நோய் பரவலை தொடர்ந்து  கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களுக்காக தூய்மைப் பணியாளர்கள், அரசுத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில் திருப்பூர் ரிப்போர்ட்டர்ஸ் அசோசியேசன் சார்பில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு  தேவையான அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் டாக்டர் ராஜன் , சமூக சேவகர் கே.ஜி.எஸ். ரமேஷ், கோவை தொழில் அதிபர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.


 


இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் ரிப்போர்ட்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் சாம் அமிர்தபாபு , சையது அலி, செல்வநாயகம், தட்சிணாமூர்த்தி, முகம்மது சபி, வேதநாயகம், மன்சூர் , சதம், சுரேஷ், சிக்கந்தர், கார்த்தி ,அசார்தீன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post