கொரோனா சிகிச்சை : நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல் எம்.எல்.ஏ.

கொரோனா நோய் சிகிட்சை பெற்றுவரும்
மகாராஜனின் உடல்நிலை குறித்து நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் நலம் விசாரித்த இன்பதுரை எம்எல்ஏராதாபுரம் தொகுதிக்குட்பட்ட சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் மகாராஜன். இவர் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் மதுரை விமான நிலையம் வழியாக திருநெல்வேலி வந்த மகாராஜனுக்கு கொரோனா கிருமி தொற்று ஏற்பட்டிருந்தது.


 இவரது குடும்பத்தினர் பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகே வசித்தாலும் கொரோனா பாதிப்பால்  மகாராஜன் தனது வீட்டுக்கு செல்லாமல் திருநெல்வேலியில் உள்ள பிரபல விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.


 இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை  தொடர்ந்து மகாராஜன் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானாகவே  முன்வந்து  தனக்கு சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.


 இதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில்  முதல் கொரோனா நோயாளியான இவரை உடனடியாக பாதுகாக்கப்பட்ட தனி வார்டில் அனுமதித்த மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவ குழுவினர் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


மகாராஜனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் நெல்லையில் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.


இந்த நிலையில் மகராஜன் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மகாராஜனின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க இன்று ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு    நேரில் சென்றார்.


தற்போது மகாராஜக்கு பாதுகாக்கப்பட்ட  தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை அளிக்கப்பட்டு வருவதால்  உறவினர்கள் உட்பட பார்வையாளர்கள் யாரும் அவரை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிப்பதில்லை. 
எனவே நெல்லை மருத்துவ கல்லூரி முதல்வர்  டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவ குழுவினரை நேரில் சந்தித்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மகாராஜனின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்க பட்டுவரும் சிகிட்சைகள் குறித்தும் விசாரித்தார்.


 தனிமைப்படுத்தப்பட்ட  தீவிர சிகிச்சை பிரிவில்   மகராஜனுக்கும் அதற்கு பிறகு அனுமதிக்கப்பட்டுள்ள நாற்பது கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்


தொடர் தீவிர சிகிட்சைக்கு பிறகு தற்போது மகாராஜனின் உடல்நிலை நன்கு சீரடைந்து வருவதாகவும்  இன்பதுரை எம்.எல்.ஏவிடம் கூறிய டீன் டாக்டர். ரவிச்சந்திரன் தொடர்ந்து கூறும்போது 


" இன்று கூட மகராஜனுக்கு ஒரு பரிசோதனையை மேற்கொள்ள உள்ளோம். ஏற்கனவே  இதுபோல கடந்த இரண்டு வாரங்களில் செய்யப்பட்ட  இரு பரிசோதனைகளின் முடிவுகள்  அவர் விரைவாக குணமடைந்து வருவதை காட்டியது. இன்று நடக்கும் பரிசோதனை முடிவுகளும் சாதகமாக வந்தால் அரசுக்கு தகவல் தெரிவித்தபின் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுவார்" என்றும்  தெரிவித்தார்.


 டீன் டாக்டர் ரவிச்சந்திரனிடம் தனது  மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்ட ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மகாராஜன் மற்றும்  அதை தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிட்சை பெற்றுவரும் நாற்பது நோயாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர்களை தொடர்  தீவிர  மருத்துவ கண்காணிப்பில்  வைத்திருக்க வேண்டும் என்றும் விரைவில் அவர்கள் குணமடைய எல்லாவிதமான சிறப்பு உயர் சிகிச்சைகளையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


மேலும் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அளிக்கப்பட்ட நிதியின் மூலம் கொரோனாக சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் வென்டிலேட்டர் கருவிகளை உடனடியாக வாங்கித்தர அரசிடம் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இன்பதுரை எம்எல்ஏ  டாக்டர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது ராதாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் அந்தோணி அமலராஜா உடனிருந்தார்.


கொரோனா கொடூரமான நோய் என வதந்திகள் பரப்பப்பட்டு வருகிற சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மகாராஜன் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த  சம்பவத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.