பொதுமக்கள்  வாகனங்களை காவல்துறைக்கு  தானமாக வழங்க வேண்டாம்: மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் பேட்டி 

பொதுமக்கள்  வாகனங்களை காவல்துறைக்கு  தானமாக வழங்க வேண்டாம் 


மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் பேட்டி


நெல்லை,ஏப்.12


நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதற்காக வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


இப்பேரணி இணை நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்


பின்னர் துணை ஆணையர் சரவணன் நிருபரிடம் கூறியதாவது


நெல்லை மாநகரில் 583 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது 360 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன தற்போது நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன


ஆகையால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் அப்படி மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


பொதுமக்கள் தங்களுக்குரிய வாகனங்களை தேவையில்லாமல் காவல்துறைக்கு தானம் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்


மேலும் காவல் துறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளன


பணியில் இருக்கும் காவலர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது



மேலப்பாளையம் பகுதியில் மூன்று வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன இவை நாளை முதல் அமலுக்கு வரும் அவர்களுக்கு வாகன ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது


இதேபோல் மருந்து கடைகளுக்கு வருபவர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேசி அவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட மெடிக்கலுக்கு சென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்


Previous Post Next Post