திருவண்ணாமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 1000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

திருவண்ணாமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 1000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட செயலாளர் அருள் வழங்கினார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

திருவண்ணாமலை மே 3 - நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையட்டி பள்ளி, கல்லூரிகள், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முடப்பட்டுள்ளது.

இந்த 144 தடை உத்தரவால் பொது மக்கள், ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரமிழந்து சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள், முககவசம் உள்ளிட்டவைகளை மாவட்டம் தோறும்  நிர்வாகிகள் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் ஆணை பிறப்பித்துள்ளார்.

அதனையேற்று திருவண்ணாமலை தென்கிழக்கு மாவட்டம் திருவண்ணாமலை நகரம் மற்றும் ஒன்றியம், கீழ்பென்னாத்தூர் தொகுதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1000 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப் பாதை வேங்கிக்காலில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் எம்.ஆர்.குமார் தலைமை தாங்கினார். சிறபபு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் தாரா இரா.அருள் ரூ.3லட்சம் மதிப்பில் தனது சொந்த செலவில் ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது அனைவரும் சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடகிழக்கு, வடமேற்கு மாவட்ட செயலாளர்கள் எஸ்.சுரேஷ், ஏ.ரஞ்சித், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒன்றிய செயலாளர்கள் கலாவதி, தில்லை ராமகிருஷ்ணன், முருகன், ரமேஷ் சுகானந்தம் ஆகியோர் கிராமப்புறங்களுக்கு சென்று ஏழை எளியோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் தகவல் தொழில்நுட்ப அணி பாலகணேஷ், வழக்கறிஞர் பந்தல் ராஜ்குமார், மகளிரணி சுகாசினி தங்கம் ரீகன் சம்பத் சரவணன் தங்கராஜ் ராஜ்குமார் மணி பூக்கடை சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post