நத்தம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அகற்றம்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக 8 நபர்கள் பாதிப்பிற்குள்ளான தால்   மீனாட்சிபுரம்,அண்ணா நகர், தர்பார்நகர், ஆசாத் நகர் மற்றும் கோசுகுறிச்சி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டனர். தற்பொழுது ( 8 நபர்கள்) அனைவரும் பூரண குணமடைந்து  வீடு திரும்பினர் மேலும் நத்தம் பகுதியில் புதிய தொற்று கண்டறியப்படாத அதைத்தொடர்ந்து  இன்று நத்தம் வட்டாட்சியர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நத்தம் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த 28 தடுப்புகளும் அகற்றப்பட்டது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

உடன் நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார், நத்தம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், காவல் துணை ஆய்வாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் ஒலிபெருக்கி மூலம் நத்தம் பகுதி முழுவதும்  பொதுமக்களுக்கு நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில்  தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் புதிதாக வெளி மாவட்டங்களில் இருந்து யாராவது வந்தால் வட்டாட்சியர்,காவல்துறை, சுகாதாரதுறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் 5 நபர்களுக்கு மேல் ஓரிடத்தில் சேரக்கூடாது, அவசியம் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போது முககவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது


Previous Post Next Post