இச்சிப்பட்டி ஊராட்சியில் 3000 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள்; கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்


திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பட்டி ஊராட்சியில் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இச்சிபட்டி அஇஅதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் வேலுமணி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் 3000 ஏழை எளிய குடும்பங்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கரைப்புதூர் A.நடராஜன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.இந்நிகழ்வில் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் A.சித்துராஜ், ஊராட்சிமன்றத் தலைவர் வேலுமணி, துணைத் தலைவர் சுவாமிநாதன், கார்த்தி, சென்னியப்பன், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், பருவாய் மாணிக்கம், ஆறுமுகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்.