ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வு எப்போது... கலெக்டர் தகவல்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 25 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்களை சேர்ந்த 340பெண்களுக்கு இடைக்கால கடனாக  அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம்  ஒருவருக்கு 5000 வீதம் என 2 லட்சத்து 22ஆயிரம் தொகைக்கான காசோலையும், மின்னணு குடும்ப அட்டைகளும், சிறு வணிககடன் 21காய்கறி வணிகர்களுக்கு ரூ 4லட்சத்து 20ஆயிரத்திற்கான காசோலைகளையும், 12நபர்களுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சி தலைவர் கூறும் போது,     
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 17 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும், 
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் அனைவரும் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர் எனவும், 
வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் 476நபர்கள் வந்து சென்றுள்ளனர்.


அதில் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 103 நபர்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், 
ஈரோடுமாவட்டத்தில் 18தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் 9பகுதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது எனவும், 


மீதமுள்ள 9 பகுதிகளில் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் 


அதனடிப்படையில் 5ம்தேதியன்று ஈரோடு மாநகரில் மாணிக்கம்பாளையம், சாஸ்திரிநகர், கருங்கல்பாளையம், கல்லுக்கடைமேடு, உள்ளிட்ட பகுதியில் தளர்வுகள் தளர்த்தப்படும் 


6ம்தேதியன்று பி.பி.அக்ரஹாரம்,கோபி அருகே உள்ள நம்பியூர் அழகபுரி 10ம்தேதியும்


கே.என்.பாளையம் 13ல்தேதியும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும், 


உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி கடைசியாக நோய் தொற்று ஏற்பட்டு தேதி முதல் 28நாட்களுக்கு பிறகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுபாடுகளை தளர்த்தப்படும் எனவும், 


வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மாவட்ட எல்லையிலே நிறுத்தப்பட்டு உள்ளூர் ஓட்டுனர்களை கொண்டு சரக்கு வாகனங்களை  மாவட்டத்திற்குள் இயக்கப்பட்டு வருகிறது எனவும், 


மாவட்டம் முழுவதும் 133 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன


இதில் 90 சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.இதில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேசன்,ஆவின் தலைவர் காளியப்பன்,  கோபி நெடுஞ்சாலை துறை  கோட்ட பொறியாளர் சோமசுந்தர முருகன்,   கோட்டாட்சியர் ஜெயராமன், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி,  தாசில்தார் சிவசங்கர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post