மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த கூடன்குளம் பெண்ணுக்கு  இன்பதுரை எம்எல்ஏ நிதி உதவி

*மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த கூடன்குளம் பெண்ணுக்கு  இன்பதுரை எம்எல்ஏ நிதி உதவி!*


நெல்லை மாவட்டம்  கூடங்குளம் ஊராட்சி புதுகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னதங்கம். இவரது கணவர் ஆத்தியப்பன். உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆத்தியப்பன்  வீட்டில் இருந்து வருகிறவர். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.


ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்திவரும் அன்னதங்கம் கடந்த 2ஆம் தேதி  அப்பகுதியில் வழக்கம்போல ஆடுகள் மேய்க்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அன்னதங்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.


உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அன்னதங்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அஞ்சுகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னதங்கத்தை ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை  இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.


 தனது சொந்த பணத்திலிருந்து ரூ 10 ஆயிரம் ரொக்கப் பணத்தை அன்னதங்கத்திற்கு வழங்கிய இன்பதுரை எம்எல்ஏ மின்சாரம் தாக்கியதால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அன்னதங்கத்திற்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு 
 தமிழக முதல் அமைச்சர் நிவாரணநிதியை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.