திங்களூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக அரிசி இலவசமாக வழங்கப்பட்டது


திங்களூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட சிறுவலூர் ஊராட்சி சேவுகாம்பாளையத்தில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.


இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் திங்களூர் வட்டார உறவின்முறை சங்கத்தின் தலைவர் என்.ரவிச்சந்திரன், துணைத் தலைவர்,  சமத்துவ மக்கள் கழகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஈரோடு மாவட்ட செயலாளர் எம்.கே.டி.கோவிந்தசாமி மற்றும்  செயலாளர் கே.ஈஸ்வரமூர்த்தி ஆலோசகர் ஜெயராமன், மூர்த்தி , அருள்குமார், யுவராஜ், மாரிமுத்து, வெங்கடாச்சலம்  ஆகியோர் கலந்து கொண்டனர்