நல்லூர் ஒன்றிய தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் கொரோன நிவாரணம்
நல்லூர் ஒன்றிய தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில்  கொரோன நிவாரணம் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், எம்எல்ஏ, கலைச்செல்வன் வழங்கினார்கள்.  

 


 

நல்லூர் ஒன்றிய தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், எம்எல்ஏ, கலைச்செல்வன் ஆகியோர் வழங்கினார்கள்.  

 

கடலூர் மாவட்டம்,  வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட 45. தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.  

 

நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் எம்எல்ஏ, கலைச்செல்வன் தலைமையில் முன்னாள் எம்பியும், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அருண்மொழித்தேவன் 45 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட பால்வள சேர்மன் பச்சமுத்து, நல்லூர் ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம், துணை சேர்மன் ஜான்சிமேரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராசு, ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன்,  ஊராட்சி மன்ற தலைவர்கள் பா,கொத்தனூர் முனியன், நல்லூர் புஷ்பா, மங்களம்பேட்டை முன்னாள் சேர்மன் பாஸ்கரன், மற்றும் அதிமுக நல்லூர் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

  

Previous Post Next Post