அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ம.புடையூர் கிராம பொதுமக்களுக்கு நிவாரணம்

அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ம.புடையூர் கிராம பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கல்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூர் ஊராட்சியில் இன்று மங்களூர் ஒன்றிய அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ம. பொடையூர் பகுதியில் வசிக்கும் 100  குடும்பங்களுக்கு அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் அரிசி ,காய்கறிகள், அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

 

நிகழ்விற்கு அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் அம்பேத்கர் ,பிரச்சார செயலாளர் ராஜேந்திரன், மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி வேப்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப் பாளராக மங்களூர்  வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் தனவேல், கல்வி விழிப்புணர்வு பேரவை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நாராயணசாமி, முதுகலை ஆசிரியர் கல்விநாதன், ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணம் மற்றும் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர லட்சாதிபதி, சர்வேயர் நீலகண்டன், கூட்டமைப்பு நிர்வாகிகள் அய்யாசாமி, சக்திவேல், பிரசாத் ,கணினி ஆப்ரேட்டர் கிருஷ்ணகுமார்,

விசிக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் காசிகணேசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.