நீரில் மூழ்கிய தோழியை காப்பாற்ற முயன்ற 3 சிறுமிகள் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கரசங்கால் ஏரியில் அங்குள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த சித்ரா(35) திலகா(40) ஆகியோர் துணி துவைக்க சென்று இருந்தனர். அப்போது துணி துவைக்க சென்ற  சிறுமியர்கள் பூர்ணிமா(12) கலைவாணி(16) சூர்யா(13) ஆகியோர் நீரில் இறங்கி குளித்துக் கொண்டுஇருந்தனர்.திடீரென கலைவாணி நீரில் மூழ்கி உள்ளார். அப்போது மற்ற 4 பேரும் அவரை காப்பாற்ற முயன்று உள்ளனர். ஆனால், காப்பாற்ற சென்றவர்களில்  திலகாவை தவிர மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


திலகா(40) கவலைக்கிடமான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக படப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.