கோபிசெட்டிபாளையத்தில் 74-வது சுதந்திர தினவிழா


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 74-வது சுதந்திர தினவிழாவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜெயராமன் தேசிய கொடியேற்றினார்.வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சிவசங்கர் தேசிய கொடியேற்றினார்.காவல் நிலையத்தில் கோபி காவல்துறை  துணை கண்காணிப்பாளர் தங்கவேல் தேசிய கொடியேற்றினார். உடன் காவல்துறை  ஆய்வாளர் சோமசுந்தரம் உள்ளார்.நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் தாணு மூர்த்தி தேசிய கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் மௌதீஸ்வரன் தேசிய கொடியேற்றினார்.உடன் கவுன்சிலர்கள் உள்ளனர். விழாவானது   கோபியில் அனைத்து அரசு அலுவலகங்களிலும்   சிறப்பாக கொண்டாடப்பட்டது.