நெல்லை  எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க  வேண்டும்... பொது மக்கள் கோரிக்கை 



கொரனா  தடுப்பு  நடவடிக்கையாக  பஸ்  போக்குவரத்து  ரெயில்  போக்குவரத்து  தமிழகத்தில் அடியோடு  ரத்து ஆனது.  தற்போது  ஊரடங்கு  தளர்வுக்கு  பிறகு  பேரூந்துகள்  ரயில்  போக்குவரத்தை  இயக்க  தமிழக  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி  அதிகாரபூர்வமாக  அறிவித்தார். தற்போது  மாவட்டம்  விட்டு  அடுத்த  மாவட்டங்களுக்கு  தனியார்  மற்றும்  அரசு  விரைவு  பேரூந்துகளை  இயக்க  தமிழக  அரசு  முன்வந்துள்ளது.  இதனால்  பயணிகள்  மிக்க  மகிழ்ச்சியாக உள்ளனர். 
ஆனால்  ரயில்வே  நிர்வாகம் நெல்லை  மக்களின்  நீண்ட  நாட்களாக  கனவு  கண்ட நெல்லை  எக்ஸ்பிரஸ்  ரயிலை இயக்க  அனுமதி  வழங்கவில்லை.
அதே  நேரத்தில் சென்னை எழும்பூர்-செங்கோட்டை  சிலம்பு எக்ஸ்பிரஸ்  சென்னை சென்ரல்-  மேட்டுப்பாளையம்  நீலகிரி  எக்ஸ்பிரஸ்  சென்னை  எழும்பூர் - கன்னியாகுமரி  எக்ஸ்பிரஸ்   சென்னை  எழும்பூர்  -தூத்துக்குடி  முத்து நகர்  எக்ஸ்பிரஸ்  ஆகிய  4 ரயில்களுக்கான  அறிவிப்பை  மட்டும்  ரயில்வே துறை  அறிவித்துள்ளது.எனவே  பயணிகள்  ஏமாற்றத்தை  தவிர்க்க  நெல்லை  எக்ஸ்பிரஸ் ரெயில்  இயக்க  வேண்டும்  எனபது  நெல்லைைை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Previous Post Next Post